வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:41 IST)

மழைக் காரணமாக மல்லிகைப் பூ விலை உச்சம்!

மழை மற்றும் போதுமான விளைச்சல் இல்லாதது காரணமாக மல்லிகைப் பூவின் விலை கிலோ 1000 ரூபாயைத் தொட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பூவின் தேவை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழை மற்றும் போதுமான விளைச்சல் இல்லாததால் மல்லிகைப் பூவின் விலை 1000 ரூபாயைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை இரவு வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.