திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:27 IST)

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

பொன்னை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சித்தூரில் உள்ள கலவகுண்டா என்ற அணை நிரம்பியதை அடுத்து அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு தற்போது வினாடிக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களான  பாலே குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாத்தாண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு இடம்மாறி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்