திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (12:22 IST)

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை; தமிழக காவிரியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் தமிழக பகுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நன்றாக பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நன்றாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாக உள்ளது. நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து விசைப்படகு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.