நடுக்கடலில் மீனவர்கள் இடையே சண்டை : போலீஸார் துப்பாக்கிச் சூடு
புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம், நல்லவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சண்டையில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம், நல்லவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது, இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே சுருக்கு வலையைப் பயன்படுத்துவதில் மோதல் எழுந்துள்ளது.அதனால் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடற்கரை ஓரம் மோதலில் ஈடுபட்டனர். வீராம்பட்டினம், நல்லவாடு ஆகிய இரு கிராம மக்களிடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் மக்களிடையே உருவான மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி 20 ரவுண்டு துப்பாக்கியால் சூடு நடத்தினர். தற்போது அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.