மாணவனுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட இன்ஸ்பெக்டர் : சென்னையில் பரபரப்பு
மாணவனுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட இன்ஸ்பெக்டர் : சென்னையில் பரபரப்பு
சென்னையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காரில் வந்தார்.
காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, இன்ஸ்பெக்டர் காருக்கு பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க, தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இஇஇ படித்துவரும் மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரிடம், ”என் காரை எடுக்க வேண்டும், உங்கள் காரை சற்று நகர்த்துங்கள்” என்றார்.
இதனால் இன்ஸ்பெக்டருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அந்த இளைஞரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கி உள்ளார். பின் இருவரும் கட்டிப்புரண்டு கடுமையாக சண்டையிட்டனர். அதை பார்த்த பொது மக்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டருக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதை அடுத்து, இன்ஸ்பெக்டர், பெரியமேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக, புகார் அளித்தார்.