செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (15:59 IST)

உடற்பயிற்சி செய்த போது பெண் மருத்துவர் உயிரிழப்பு

anvitha
சமீப காலமாக இளம் வயதிலேயே சமானிய மக்கள்  சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மாரடைப்பால் மரணமடைவது அதிகரித்து வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு  கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்  உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் காலமானார்.

கடந்த  நவம்பர் 1 ஆம் தேதி கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் நடிகை பிரியா ( 34 வயது) கர்ப்பிணியாக இருந்த   நிலையில், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றதைத் தாங்கிக் கொள்ள முடியாத திருப்பதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  சென்னை தனியார் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மருத்துவர் அன்விதா(24) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.