புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 மே 2020 (09:00 IST)

குடோனில் மருந்து தயாரித்து வெளிநாடுகளில் விற்பனை ! - திருத்தணிகாச்சலம்

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக வீடியோ வெளியிட்டு கைதான திருத்தணிகாச்சலம் குறித்து மேலும் பல மோசடி சம்பவங்கள் வெளியே வர தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக வீடியோ வெளியிட்ட போலி மருத்துவர் திருத்தணிகாச்சலம் கடந்த மே 6 அன்று கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளனர். திருத்தணிகாச்சலம் பிஎஸ்சி வேதியியல் படித்தவர் என்றும், பரம்பரை வைத்தியர் என்ற சான்றிதழை கொண்டு தன்னை சித்த மருத்துவர் என கூறி கொண்டதும் தெரிய வந்துள்ளது. அந்த சான்றிதழையும் 2014லேயே இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கவுன்சில் ரத்து செய்துள்ளது.

சுகாதார துறை அளித்த புகாருக்கு பிறகு பொதுமக்களில் சிலரும் தணிகாச்சலத்தின் மருந்துகளை உட்கொண்டதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக புகார் கூறியுள்ளனர். இந்நிலையில் திருத்தணிகாச்சலம் தேனியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் குடோன் அமைத்து மருந்து தயாரித்து அதை மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் அனுப்பி பணம் ஈட்டியது தெரிய வந்துள்ளது. இதனால் திருத்தணிகாச்சலத்தின் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.