ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (19:25 IST)

டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.8 லட்சம் பணம் பறிப்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள வீதிவிடங்களன் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையில், விளமல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் தட்சணாமூர்த்தி(53) சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டாஸ்மாக்கில் மதுவிற்பனை செய்த பணத்தை நன்னிலம் வங்கியில் சென்று பணத்தில் போடுவதற்கு அவர் வாகனத்தில் வருவார்..

இந்த நிலையில், இன்று வீதிவிடங்கன் பகுதியில் இருந்து ஸ்ரீவாஞ்சியம் வழியாக நன்னிலம் நோக்கிப் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது. இரண்டு மர்ம  நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு வந்து அவரை வழிமறித்து, அரிவாளால் கையை வெட்டி அவரிடமிருந்து ரூ.8லட்சத்து 45 ஆயிரம் பணத்தை பிடுங்கிச் சென்றனர்.

வெட்டுப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த  தட்சணாமூர்த்தியை  அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.