செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (18:49 IST)

’நாளை முதல் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது’ - மக்களே உஷார்!

பழைய ரூ.500 நோட்டுகள் நாளை முதல் [டிசம்பர் 15] எங்கும் செல்லாது எனவும், வங்கியில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.

பெட்ரோல் நிலையங்கள், குடிநீர் வரி, சொத்து வரி, மருந்து வாங்க, ரயில் டிக்கெட் வாங்க உள்ளிட்டவைகளுக்கு பழைய ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் பங்குகள் மற்றும் ரயில் டிக்கெட் வாங்க ரூ.500 நோட்டு பயன்பாடு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி இரவுடன் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், 'பழைய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த அளிக்கப்பட்டிருந்த விலக்கு வியாழன் இரவு 12 மணியுடன் முடிவடைகிறது' என்றார்.

மருந்து கடைகள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்திட பழைய ரூ.500 நோட்டுகளை இனி பயன்படுத்த முடியாது. பழைய ரூ.500 நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே செலுத்த முடியும்.