செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: சனி, 2 ஜனவரி 2016 (19:34 IST)

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது.
 

 
 
 
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 37 காசுகளும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தற்போது மொத்தமாக பார்க்கையில் பெட்ரோல் விலையில் 19 ரூபாய் 71 காசுகள் வரையும் டீசல் விலையில் 13 ரூபாய் 83 காசுகளும் மத்திய அரசுக்கான வரியாக செல்கிறது.  
 
இந்த முறையும் இந்த வரி உயர்வை வடிக்கையாளர்கள் மீது பெட்ரோலிய நிறுவனங்கள் சுமத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது பெட்ரோலிய நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.