1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (10:11 IST)

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி? 12000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

ilangovan
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் இன்று அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான முன்னிலை நிலவரங்கள் தகவலை பார்ப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சற்றுமுன் வரை 19867 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 7324 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனை அடுத்து 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. 
 
மேலும் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா 1146 வாக்குகள் பெற்றுள்ளார் 
 
தேமுதிக வேட்பாளர் வெறும் 178 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran