1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (14:15 IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் பேட்டி

evks son
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன் என ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் மகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் தமிழ்மகன் ஈவேரா திடீரென மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் காலமானார். 
 
இந்த நிலையில் இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னொரு மகனான சஞ்சய் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன், என்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளேன், வேட்பாளர் தேர்வு குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by siva