புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (08:19 IST)

அதிமுக அலுவலகத்தில் வன்முறை; ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சிறை!

அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் சென்ற ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமை அலுவலக கதவை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.