புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (13:20 IST)

பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
பொங்கல் பண்டிகைக்காக ஆயிரத்து 127 கோடி ரூபாய் மதிப்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த பொறுப்புகள் தரமானவையாக இல்லை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் 
 
தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் மக்கள் சிறப்பான பொங்கலை கொண்டாட முடியவில்லை என்றும் அவர் கூறினார் 
 
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள ஊழலை மறைக்கவே ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.