வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:26 IST)

தினகரனுக்கு ஆதரவாக 16 எம்.எல்.ஏக்கள் ; எடப்பாடி பக்கம் 119 - ஆட்சி கவிழுமா?

அதிமுகவின் இரு அணிகளும் இணைய இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
6 மாத இடைவெளிக்கு பின் அதிமுகவின் எடப்பாடி அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி ஆகிய இரண்டும் இன்று இணைய இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 
அதேநேரம், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் 20 எம்.எல்.ஏக்களில்  16 எம்.எல்.ஏக்கள் எந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது.
 
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி  பக்கம்  உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநயகரோடு சேர்த்து 119 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் வேண்டும். அந்த 119 எம்.எல்.ஏக்களில் 4 பேர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள். எனவே, அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.