ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:43 IST)

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இரண்டாவது மற்றும் இறுதி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற எஞ்சினியரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
2-வது மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் மாணவர்களை தவிர பிற செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
இந்த மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் மே 21-ந்தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாளாக கருத்தில் கொண்டு, மே 21-ந்தேதி வரையிலான நாட்களுக்கு இடைப்பட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம். வகுப்புகள் அரசின் உத்தரவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும்.
 
இவர்களுக்கான செய்முறைத்தேர்வு மே 24-ந்தேதியும், எழுத்து தேர்வு ஜூன் 2-ந்தேதியும் தொடங்கி நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜூலை 1-ந்தேதி தொடங்கும்.
 
இதேபோல், டிசம்பர்-மே மாதத்துக்கான இறுதி செமஸ்டர் வகுப்புகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இவர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ந்தேதி ஆகும். இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 15-ந்தேதி நடைபெறும். எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26-ந்தேதி முதல் நடைபெறும்.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது