திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (08:43 IST)

நேற்றுடன் முடிவடைந்தது என்ஜினியரிங் விண்ணப்பம்.. கடந்த ஆண்டை விட அதிகம்..!

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்கள் இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
என்ஜினியரிங் கல்லூரிக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் கடந்த ஆண்டு விட இது அதிகம் என்றும் கூறப்படுகிறது.
 
விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை ஒதுக்கப்படுவதாகவும், சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வரும் 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளதாகவும், இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ஜூன் 26-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கலந்தாய்வு ஜூலை மாதம் 2-ந் தேதி முதல் தொடங்குகிறது என்றும்,  முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பொது கலந்தாய்வு ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி வரை நடைபெற உள்ள என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva