ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (08:34 IST)

தபால் நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்: என்ன காரணம்?

பணியிட மாறுதல் வழங்கவில்லை என்ற ஆத்திரத்தில் மன்னார்குடியை சேர்ந்த தபால் ஊழியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த ஜோயல்ராஜ் என்பவர் மன்னார்குடி தலைமை தபால் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜோயல்ராஜ் தனக்கு சொந்த ஊருக்கே பணியிட மாறுதல் செய்துத் தருமாறு மேலாளரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரிடம் கேட்டு வந்துள்ளார்.
 
ஆனால் மேலாளர் ஜோயல்ராஜின் பணிமாறுதல் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோயல்ராஜ் குடிபோதையில் தபால் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார். சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கினார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜோயல்ராஜை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.