மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு..தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% சதவீதம் வரிவிலக்கு அளிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அதில் மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15% முதலீடு மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு விதிக்கப்படும் என அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துமாறு தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. அதன் முதல் தொடக்கமாக ஹூண்டாய் கோனா என்ற எலெக்டிரிக் காரை முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்து மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் அதனை தொடர்ந்து சென்னையில் எலெக்டிரிக் பேருந்துகளையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகங்களுக்கு 100% சதவீதம் வரிவிலக்கு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.