மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி - ரஜினிகாந்த்
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ள நரேந்திர மோடி ஜிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மற்றும், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துகள்" என்று ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.