”தேர்தல் நேர்மையாக நடந்து முடிந்தது”.. மாநில தேர்தல் ஆணையர்
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் அமைதியான முறையிலும் நடத்தி முடிக்கப்பட்டது என மாநில் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படவில்லை என எதிர்கட்சிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, “உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.