1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (11:43 IST)

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு முழு விவரங்கள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்,.
 
மேலும் தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை தான் விசாரணை செய்வார்கள் என்றும், பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  என்றும் வருமான வரித்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என்றும்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக   நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில்  மூன்று பேர் அவர்கள் பையில் கட்டுக்கட்டாக ஏராளமான பணத்தை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்துடன் பிடிப்பட்டவர்கள் புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வரும் பாஜக உறுப்பினர் சதீஷ் அவரின் சகோதரர் நவின் மற்றும் லாரி ஓட்டுனர் பெருமாள் என தெரிய வந்தது.  
 
Edited by Siva