1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (13:36 IST)

ஏப்ரல் 4ஆம் தேதி எத்தனை மணி வரை பிரச்சாரம் செய்யலாம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்பதும் ஏப்ரல் 5-ஆம் தேதி சமூக ஊடகங்கள் உட்பட எதிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 4ஆம் தேதி மாலை எத்தனை மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் 12:00 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது 
 
இதனை கணக்கில்கொண்டு ஏப்ரல் 4ஆம் தேதி 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு காரணமாக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சிகள் உள்ளன