1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (15:16 IST)

ஏற்கனவே விரலில் மை இருந்தால் என்ன நடக்கும்? விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு ஒரு அறிவிப்பு..!

சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற தேர்தலின் போது வைக்கப்பட்ட மை இன்னும் அழியாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
 
கடலை ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில் இடது ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது . இந்த மை இன்னும் சிலருக்கு அழியாத நிலையில் தற்போது விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 
 
இந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் இடது கை ஆட்காட்டி விரலில் ஏற்கனவே மை இருந்தால் அதற்கு மாற்றாக இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva