எடப்பாடி பழனிசாமி இருப்பது தற்காலிக பதவி தான்- முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்களே அவருடன் பேசுவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 50 எம்.எல்.ஏக்கள் எங்கள் லிங்கில் உள்ளனர். ஆர்.எஸ்.பாரதி நேற்று முன் தினம் திமுகவின் 10 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு கட்சி மாற இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி 50 அதிமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் லிங்கில் உள்ளனர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், 50 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எங்கள் லிங்கில் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் எப்போது அழைத்தாலும் திமுகவுக்கு அவர்கள் வந்து விடுவார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு இன்று முதல்வர் முக ஸ்டாலின், 10 திமுக எம்.எல்.ஏக்கள் தங்களோடு பேசுவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். முதலில் அவர் கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்களே அவருடன் பேசுவதில்லை. அவர் இருப்பதே தற்காலிக பதவியில்தான். மேலும், தானும் உயிர்வாழ்வதாகக் காட்டிக்கொள்ளவே இப்படி அவர் பேசிவருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.