செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (15:26 IST)

'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வடலூர் பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''உலகம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ கட்டுவதற்கு இந்த விடியா திமுக அரசு முனைந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
 
வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெருவெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
 
எனவே, வடலூர் பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்''  என்று தெரிவித்துள்ளார்.