1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (16:15 IST)

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா: ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Edappadi
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் வரும் 24ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படும் என்றும் அன்றைய தினம் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என அதிமுக தொண்டர்களை கேட்டுக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
மேலும் அன்றைய தினம் கண்தானம் ரத்ததானம் மருத்துவ முகாம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இலவச திருமணங்களை நடத்துதல் இலவச வேட்டி சேலை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஜெயலலிதாவின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கிடுமாறும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். 
 
இடைத்தேர்தல் பணி முடிந்ததும் மார்ச் மாதம் 6 நாட்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் பொதுக்கூட்ட பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran