வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (18:58 IST)

எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது: மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி முழக்கம்..!

எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி முழக்கமிட்டுள்ளார். அவர் இந்த மாநாட்டில் மேலும் பேசியதாவது:
 
மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான், தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுக தான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது
 
தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர், அவர் உருவாக்கிய கட்சி அதிமுக . தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி  
 
அதிமுகவின் பொன்விழா ஆண்டு இது: 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம். எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவன், இங்கே உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளிகள், அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை  என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
Edited by Siva