திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (15:42 IST)

அரசு நடவடிக்கையால் பயந்து போன கொரோனா...

தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என முதல்வர் பேச்சு. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 86,36,011 ஆக உயர்ந்துள்ளது.
 
குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்வருமாறு பேசினார், 
 
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருவதற்கு அரசின் நடவடிக்கையே காரணம் என கூறினார்.