1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (11:20 IST)

மாமன்னன் படம் ஓடுனா என்ன, ஓடலைன்னா என்ன? எடப்பாடி பழனிசாமி

மாமன்னன் திரைப்படம் ஓடுனா என்ன ஓடலைன்னா என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி மாமன்னன் திரைப்படம் ஓடுனா என்ன? ஓடலைன்னா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகிறது? என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறை சிறப்பாக செயல்பட்டது என்றும் கொரனாவை சிறப்பாக எதிர்கொண்டது என்றும் தெரிவித்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது என்றும் மருத்துவர்கள் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
 
மாமன்னன் திரைப்படம் குறித்து கமல் ரஜினி உள்பட பல பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அந்த படம் ஓடினால் என்ன ஓடலைன்னா என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran