செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (12:20 IST)

சூரசம்ஹாரம் ஸ்டார்ட்..! சேலத்தில் எடப்பாடியாருக்கு போஸ்டர்!

EPS Poster
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

இதனால் டெல்லி புறப்பட்டு சென்ற ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ கட்சி பொருளாளர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஓபிஎஸ் தேனியிலிருந்து சென்னை புறப்பட்டுள்ளார்.

இதனால் தொடர்ந்து அதிமுகவில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தற்போது சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் “சூரசம்ஹாரம் ஸ்டார்ட்” என்ற வாசகத்துடன், எடப்பாடியார் கையில் வேலை ஏந்தியுள்ள போட்டோ உள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.