1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (20:36 IST)

எடப்பாடி பழனிசாமி எதையாவது சொல்லி வருகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Edappadi
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நானும் ஒருவன் இருக்கிறேன் என்பதை மக்களுக்குக் காட்ட எதையாவது சொல்லி வருகிறார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டி இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின் நானும் ஒரு இருக்கின்றேன் என்பதை மக்களுக்குக் காட்ட எடப்பாடி பழனிச்சாமி அது சொல்கிறார் என்று தெரிவித்தார் 
 
மேலும் திமுக ஆட்சி வந்தபிறகு ஜாதி மத மோதல்கள் வன்முறைகள் துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் வெளிநாட்டு முதலீடுகள் தேடி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்