1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (17:45 IST)

ஈரோடு கிழக்கு அண்ணாமலைக்கு ஒதுக்கப்படுகிறதா? எடப்பாடி அதிரடி திட்டம்!

Edappadi
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
எனவே காங்கிரஸ் கட்சியின் சார்பில் தான் ஒரு வேட்பாளர் இங்கு நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுமா அல்லது அண்ணாமலைக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக போட்டியிட்டால் பாஜக ஆதரவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva