வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (09:21 IST)

லண்டனில் கையெழுத்தான முதல் ஒப்பந்தம் – தமிழகத்துக்கு வருகிறது கிங்ஸ் மருத்துவமணை !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளைத் தமிழகத்தில் திறக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணத்தின் முதல் கட்டமாக லண்டன் சென்றுள்ள அவர், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனைகளின் கிளைகளை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பல்வேறு விமர்சனங்களுடன் வெளிநாடு சென்ற பழனிச்சாமி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்களும் வெறும் கண்துடைப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.