புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:18 IST)

கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய் தடுப்பு பொருள்களை வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கூறிய அறிவுரையின்படி கொரோனா இரண்டாவது அலை தடுப்பு பணிகளில் ஈடுபட்ட திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. எனவே தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளூடன் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசத்தை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து இன்று முதல் திமுக தொண்டர்கள் கபசுர குடிநீர் வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது