இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் கடந்த மாதம் 21 ஆம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தில், சுமார் 331 பேர் உயிரிழந்ததாகவும்,சுமார் 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் ஜாவா தீவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj