1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (09:46 IST)

ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு - அமைச்சர் உருக்கமான டுவீட் ! வைரல் வீடியோ

உயிருக்குப் போராடுபவர்களைப் படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச் சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சாலையில் ஒருவர் அடிபட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கவே, அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உடனடியாகச் சென்று முதலுதவி செய்து அந்த நபரைக் காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
மனமெங்கும்பரவி கிடக்கிறது நிம்மதி காலனின் கயிற்றில் விழுந்த ஒரு உயிரை கணப்பொழுதில் மீட்டெடுத்த பிரமிப்பு இன்னமும் நீங்காதிருக்கிறேன் ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என பதிவிட்டுள்ளார்.

அமைச்சர்களுடம் அதிமுக பிரமுகர்களும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.