கடுப்பில் வந்த துரைமுருகன்? உதயநிதியுடனான சந்திப்பில் நடந்தது என்ன?
திமுக பொருளாளர் துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை சந்தித்துவிட்டு வந்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மதத்தை புண்படுத்துகிற வகையிலும், சிறுபான்மையினர்களை பழிதீர்க்கும் வகையிலும் இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமைந்திருக்கிறது.
இஸ்லாமிய சமுதாயத்தினர், இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து அகதிகளாக வந்திருக்கிற தமிழர்களையும் இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அந்த சட்டம் சொல்கிறது.
இந்த சட்டம் தீதானது என்பதால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே அந்த வெறுப்பை காட்டுவதற்காக தான் திமுக இளைஞரணி உதயநிதி தலைமையில் அந்த சட்ட நகலை வீதிதோறும் கிழித்தெறிந்துள்ளனர். ஆனால், இவர்களை கைது செய்து அடைத்துவைத்துள்ளனர்.
திமுகவின் இளைஞர் அணி பட்டாளம் வீறுகொண்டு எழுந்துள்ளது. இதை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு இல்லை. இங்கிருக்கிற எடப்பாடி அரசுக்கு சட்டமும் தெரியாது. இது தமிழனுக்கு எதிரானது என்பதும் தெரியாது என் கடுப்பாக பேசிவிட்டு நகர்ந்தார்.