திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 6 ஜூலை 2016 (11:27 IST)

குடி போதையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் சண்டையிட்ட காவலர்

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலர் குடிபோதையில், உதவி ஆய்வாளருடன் சண்டையிட்டதல் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 
 
வேலை நேரத்தின் போது மது அருந்திவிட்டு தலைமை காவலர் தாமதமாக வந்துள்ளார். இதனை காவல் உதவி ஆய்வாளர் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
கட்டிப்புரண்டி இருவரும் சண்டையிட்டுக் கொண்டதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.