வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (11:40 IST)

சரக்கடிக்க பணம் தராத மனைவி; வீட்டை கொளுத்திய குடிபோதை குமார்! – சேலத்தில் பரபரப்பு!

சேகத்தில் மதுகுடிக்க மனைவி பணம் தராததால் போதை ஆசாமி வீட்டை கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சம்பளகாடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்த நிலையில், பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிக்க காசு கேட்டு குமார் அடிக்கடி பழனியம்மாளைஅடித்து துன்புறுத்தியுள்ளார், சம்பவத்தன்று தன்னிடம் காசு இல்லை என பழனியம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த குமார் தனது சொந்த வீட்டையே தீ வைத்துள்ளார். பழனியம்மாளும், குழந்தைகளும் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் முழு வீடும் எரிந்து சாம்பலானது.

இதுதொடர்பாக பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.