1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (07:52 IST)

சென்னை அழைத்து வரப்படுகிறார் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் பிரபலங்கள் யார் யார்?

போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நேற்று ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் முதல் கட்ட விசாரணை முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக அவரை சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதை பொருள் மூலம் கடத்திய பணத்தில் தான் மங்கை என்ற சினிமா உள்பட பல்வேறு முதலீடு செய்ததாக சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் இதுவரை 3500 கிலோ போதைப்பொருள் கடத்தியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் போதை பொருள் கடத்திய பணத்தை பல பிரபலங்களிடம் அவர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பணத்தால் பயனடைந்தவர்கள் பட்டியல் தனியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள் அவரை சென்னை அழைத்து வரலாம் என்றும் அப்போது அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் சினிமா பிரபலங்கள் உட்பட பல பிரபலங்கள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  


Edited by Siva