இதை மட்டும் செய்யுங்க ரஜினி சார்! மது குடிப்போர் சங்கம் வேண்டுகோள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் அவர் தனது ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை கூறினார். அவற்றில் ஒன்று மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது. தனக்கு இந்த விஷயத்தில் பெரிய அளவில் அனுபவம் இருப்பதால் மதுவை நிறுத்தும்படி கூறுவதாகவும், அதேநேரத்தில் மது குடிப்பவர்கள் உடனே நிறுத்த முடியாது என்றும் படிப்படியாகதான் நிறுத்த முடியும் என்றும் குடிப்பவர்கள் எல்லோரும் யோகியோ... சித்தரோ இல்லை என்பதால் படிப்படியாக குறையுங்கள்' என்றும் அறிவுரை கூறினார்.
இந்த அறிவுரைக்கு பின்னர் மது குடிப்போர் சங்கம் ரஜினிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஆரம்பகாலத்தில் ரஜினியின் சினிமாவில் குடிப்பதை பார்த்துதான் பலர் மது குடிக்க பழகியதாகவும், அதற்கு பிராயசித்தமாக உங்களுடைய சொந்த செலவில் 'குடி மீட்பு மையம்" ஒன்றை திறந்திட வேண்டும் என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
மது குடிப்போர் சங்கத்தின் வேண்டுகோளை ரஜினி நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்