திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:06 IST)

10.5% இட ஒதுக்கீடு: பாமக நாளை அவசர கூட்டம்

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக நேற்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.
 
 இந்த நிலையில் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் அன்புமணி பாமக தலைவர் ஜிகே மணி ஆகியோர் தலைமையில் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது 
 
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பாமக மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தருவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என தெரிகிறது.