புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (15:50 IST)

இரட்டை மரண வழக்கு...சாத்தான்குளத்தில் பணியாற்றிய 9 போலீஸார் மீது குற்றப்பத்திரிக்கை ...சிபிஐ

சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி சாத்தான் குளத்தில் போலீஸார் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் வழக்கில் சிபிஐ போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 9 போலீஸாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கூட்டுச்சதி,  உள்ளிட்ட பிரிவுகளில் 9 போலீஸார் மீது 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.