செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:57 IST)

திமுகவால் இந்தி எதிர்ப்பில் வெற்றி பெற முடியாது: கே.டி.ராகவன்

கடவுள் மறுப்புக் கொள்கையில் திமுக தோல்வியடைந்ததை போல் இந்தி எதிர்ப்புக் கொள்கையிலும் திமுக எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது என்று பாஜக பிரமுகர் கே.டிராகவன் தெரிவித்துள்ளார் 
 
 
இன்று தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட கே.டி ராகவன் ’கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னால் திமுக திமுகவினர் கடுமையாக இந்து மத கடவுள்களை எதிர்த்தனர். இந்துமத சிலைகளை ரோட்டில் போட்டு மிதித்து அதை பெருமையாகவும் கூறினார். ஆனால் இன்று அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது. தன்னுடைய குடும்பத்தார்கள் கோவில்களுக்கு செல்வதாகவும் அவர்கள் கடவுளை ஏற்றுக் கொண்டதாகவும் தற்போது கூறி வருகின்றனர். எனவே திமுகவின் அடிப்படை சித்தாந்தமான கடவுள் மறுப்புக் கொள்கை என்பது தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று கூட கோவில்களுக்கு செல்பவர்களை வாழ்த்துவோம் என்று வைகோ கூறியிருப்பது அவரது மாற்றத்தை காட்டுகின்றது 
 
 
கோவில் எதிர்ப்பு கொள்கையில் எவ்வாறு திமுக தோல்வி அடைந்ததோ, அதே போல் இந்தி எதிர்ப்புக் கொள்கைகயிலும் திமுகவால் வெற்றி பெறவே முடியாது. திமுக தற்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்த நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. முதலில் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியது அவர்கள் நடத்தி வரும் இந்தி பள்ளிகளுக்கு எதிராகத்தான். திமுகவின் 45 தலைவர்கள் நடத்தி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. முதலில் அந்தப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு, தமிழ் மட்டுமே உள்ள பள்ளிகளை நடத்த சொல்லி விட்டு அதன்பின் போராட்டம் செய்யுங்கள் என்று மக்கள் கேள்வி கேட்பார்கள்.


எனவே இந்திக்கு எதிராக திமுக போராடுவதாக கூறிக் கொண்டாலும் எந்த காலத்திலும் இந்த போராட்டத்தில் திமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்று கே.டி.ராகவன் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்