வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (15:39 IST)

சபாநாயகர தூக்கி நோ யூஸ்; வேறு ரூட் பிடிக்கும் திமுக: ஸ்டாலின் புது கணக்கு!

சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதை தவிர்த்துவிடலாம் என திமுக சார்பில் ஆலோசிக்கப்படுகிறதாம். 
 
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், சட்டசபையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதிலும் உறுதியாக இருந்த நிலையில், தற்போது இவை அனைத்தையும் கைவிடும் நோக்கத்தில் உள்ளதாம். 
 
அதாவது, இது போன்று தேவையற்றதை செய்வதை விடுத்து சட்டசபை நடவடிக்கைகள் மூலம் வெற்றி முகத்தை தக்க வைக்க திமுக சிந்திக்கிறதாம். சட்டசபைக்கு போவதே வெளிநடப்பு செய்யத்தான் போன்ற விமர்சனங்களை தவிடுபொடியாக்க இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
சட்டசபையில் முழு நேரம் இருந்து மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி தரும் முடிவோடு திமுக இருக்கிறது என திமுக தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இதற்கேற்ப திமுக தலைவர் ஸ்டாலினும் சட்டசபையில் பேச வேண்டிய மக்கள் பிரச்சனைகளை தெரிவியுங்கள் என நிர்வாகிகளிடம் கேட்டுள்ளாராம். நிர்வாகிகளும் களப்பணியாற்றி மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்களாம்.