திமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு இடமில்லையா? பெரும் பரபரப்பு..
நாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கிய நிலையில் இந்த முறை திமுக வேட்பாளரை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இந்த முறை பாஜக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த கட்சி போட்டியிட்ட நாமக்கல் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் திமுகவை போட்டியிட வேண்டும் என்று நாமக்கல் பகுதியில் திமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த கோரிக்கையை திமுக தலைமையையும் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுவதால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இந்த முறை திமுகவில் இருக்காது என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran