திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (12:20 IST)

வருவதும் போவதுமாய் இருக்கும் திமுக.. மீண்டும் வெளிநடப்பு

நேற்று சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம் விவகாரம் தொடர்பாக திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் இன்றும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நேற்று சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இன்று இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் விவாதம் ஏற்பட்டதால் இன்றும் திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாடு என்றும் சரியானது தான் என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.