திமுக எம்எல்ஏக்களிடம் பேரம்... கவிழும் அரசு? உளவுத்துறை தகவல்!
மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் பேச்சு.
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சார பயணத்தை இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் இந்துக்களின் உரிமை மீட்கப்பட வேண்டும். இந்துக்களின் உரிமைகளை தமிழக அரசு வழங்கவில்லை. இந்த அரசு நான்கு ஆண்டு நீடிக்குமா மூன்றாண்டுகள் நடக்குமா என்று சொல்ல முடியாது. மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும்.
மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா செய்து விட்டார். அதுபோல தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக உளவுத்துறை மூலமாக தகவல் வருகிறது. வருகின்ற நாட்களில் யார் இந்துக்களுக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களுக்கு நல்ல காலம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவாளர்களை வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.