வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:14 IST)

’துண்டு சீட்டு தளபதி’ பாஜக விமர்சனத்திற்கு ஸ்டாலின் நச் பதில்!

துண்டு சீட்டு வைத்துக்கொண்டு பேசுவது பற்றி விமர்சிக்கும் பாஜகவினருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளா திமுக தலைவர் ஸ்டாலின். 
 
பூலித்தேவனின் போர் வாள் என்று புகழப்படும் ஒண்டிவீரனின் 248 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் ஒண்டிவீரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், ஸ்டாலின் பேசியதாவது, 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது என பால் விலை உயர்வு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
அதன் பின்னர், துண்டு சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்களே இதர்கு உங்கல் பதில் என்னவென கேள்வி கேட்கப்பட்டது. 
 
இதற்கு ஸ்டாலின், இதுபோன்ற விமர்சனங்களை பற்றி நன் கவலைப்படவில்லை. ஆனால், எதையும் ஆதாரத்தோடு பேச வேண்டும். தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என பதிலளித்தார். 
 
திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பதில் பாஜக விமர்சங்களுக்கு தகுந்த பதிலாடியாகவே உள்ளது.